×

ட்டேரியில் கழிப்பிடம் கட்ட கோரிக்கை

காஊட்டி,பிப்.28: மஞ்சூர், கொலக்கொம்பை, சேலாஸ், மஞ்சக்கொம்பை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து மேட்டுப்பாளையம், கோவை போன்ற பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலை சந்திப்பாக காட்டேரி பகுதி உள்ளது. இங்கிருந்து குன்னூர் 3 கி.மீ தூரம் இருந்தாலும், பெரும்பாலான பயணிகள் இங்கிருந்தே சமவெளிப் பகுதிகளுக்கு பஸ்களில் ஏறிச் செல்கின்றனர். அதேபோல், மேட்டுப்பாளையம், கோவையில் இருந்து வரும் பயணிகளும் இங்கு இறங்கி கிராமப்புறங்களுக்கு செல்கின்றனர்.  முக்கிய சாலை சந்திப்பாக உள்ள இப்பகுதியில் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் இதுவரை ஒரு பொது கழிப்பறையோ அல்லது இலவச கழிப்பறை கட்டி தரப்படவில்லை. இதனால், இவ்வழியாக வரும் பயணிகள் அவசர தேவைகளுக்கு கடும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக, பெண்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, பயணிகள் நலன் கருதி காட்டேரி பகுதிகளில் நவீன கழிப்பிடம் அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Trier ,
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி