×

சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை மேம்படுத்த ரூ.50 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு

ஈரோடு, பிப்.28: ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கி 10 பயனாளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் ேபசியதாவது: ஈரோடு மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் 2018-19 மற்றும் 2019-20ம் ஆண்டிற்கான நன்கொடை தொகை மற்றும் அரசின் இணை மானியத்தோடு 682 ஏழை முஸ்லிம் பெண் பயனாளிகளுக்கு 21 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2019-20ம் ஆண்டில் சங்க நிர்வாகிகள் மூலம் ரூ.7.75 லட்சம் வசூல் செய்யப்பட்டு அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் 46 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டு அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 2018-19ம் கல்வியாண்டில் ஆயிரத்து 290 பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு 3 ஆயிரத்து 783 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 2019-20ம் கல்வியாண்டில் 2 ஆயிரத்து 441 பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் இணையத்தில் பதிவு செய்யப்பட்டு 5 ஆயிரத்து 367 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், உலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரியம் மூலம் 327 நபர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு இதில் 6 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு சென்னையில் 15 கோடி ரூபாய் செலவில் தங்கும் இல்லம் மற்றும் உலமாக்கள்  இருசக்கர வாகனம் வாங்க 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

கல்வியில் பின்தங்கிய சிறுபான்மை மாணவ, மாணவியரின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான வகுப்பறை, அறிவியல் கூடம், கம்ப்யூட்டர் அறை, நூலகம், கழிப்பறை, குடிநீர் வசதிகள், விடுதிகள் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்தும் வகையில் 50 லட்ச ரூபாய் வரை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். இந் நிகழ்ச்சியில், எஸ்பி சக்திகணேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minority Educational Institutions ,
× RELATED சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு...