×

கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து அதிகரிப்பு

ஈரோடு, பிப்.28:  ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் நேற்று மாடு வரத்து அதிகரித்ததால் 80 சதவீதம் விற்பனையானது. ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி செக் போஸ்ட் அருகே வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறும். இதில், புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவை மாடுகளும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சந்தைக்கு ஈரோடு மட்டுமல்லாமல் சுற்றுப்புற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவர்.

வாரந்தோறும் சராசரியாக 800 மாடுகளுக்கு மேல் வரத்தாகும். மாடுகளை வாங்க பிற மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்வர். இந்நிலையில், நேற்று கூடிய சந்தையில் கடந்த வாரத்தை காட்டிலும் மாடுகள் வரத்து அதிகரித்தது. தேனி மாவட்டத்தில் இருந்து பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 50 பயனாளிகளுக்கு மாடுகள் வாங்கிச் செல்லப்பட்டது. இதனால், வரத்தான மாடுகள் நேற்று 80 சதவீதம் விற்பனையானது. இதுகுறித்து மாட்டு சந்தை உதவி மேலாளர் ராஜேந்திரன் கூறுகையில்,`இந்த வாரம் கூடிய சந்தையில் பசு-350, எருமை-150, கன்று-175 என மொத்தம் 675 மாடுகள் வரத்தானது. வரத்தான மாடுகளில் 80 சதவீதம் விற்பனையானது’ என்றார்.

Tags : Karungalpalayam ,
× RELATED சாலையை சீரமைக்க கோரிக்கை