×

காரிமங்கலத்தில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன் வளர்ப்பு குறித்து அதிகாரிகள் திடீர் ஆய்வு

காரிமங்கலம், பிப்.28: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக, தடைசெய்யப்பட்ட கெளுத்தி மீன்கள் வரதப்பகுட்டை ஏரி, ராசப்ப குட்டை ஏரி உட்பட பல்வேறு ஏரிகளில் வளர்த்து வருகின்றனர். மனிதனுக்கும் நீர் நிலைகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் அதிகாரிகள் ஆசியுடன் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக காரிமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் முகமதுஇப்ராஹீம், உதவி இயக்குனர் ஜீஜாபாய் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்க்கப்பட்ட குட்டை, ஏரிகளுக்கு நேரில் சென்று நேற்று ஆய்வு செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், காரிமங்கலம் பகுதியில் தடைசெய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்க்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது. மீன்களை உடனடியாக அப்புறப்படுத்த, உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.

Tags : African ,
× RELATED 15 மாதங்கள் சிறை தண்டனை பெற்ற மாஜி...