×

ஓசூர் எம்ஜிஆர் கல்லூரியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு

ஓசூர், பிப்.28:ஓசூர் எம்ஜிஆர் கல்லூரியில் வாரிய தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.  ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில், செப்டம்பர் மாதம் நடைபெற்ற தொழில்நுட்பக் கல்வி வாரியத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் தலைமை வகித்து பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தினார். வேதியியல் துறை தலைவர் நாகராஜன் வரவேற்றார். விழாவில் அனைத்து துறை தலைவர்களும், விரிவுரையாளர்களும் கலந்து கொண்டு மாணவ, மாணவியரை பாராட்டினர். இயற்பியல் துறைத்தலைவர் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை துறைத்தலைவர் வசந்தகுமார், தினேஷ்பாபு ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : MGR College ,Hosur ,
× RELATED சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு...