×

சூளகிரியில் அதிமுக பொதுக்கூட்டம்

சூளகிரி, பிப்.28:சூளகிரி அதிமுக மேற்கு ஒன்றியம் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்வெங்கடேசபுரம் ஊராட்சியில் நடந்தது. இந்த விழாவிற்கு சூளகிரி அதிமுக மேற்கு  ஒன்றிய செயலாளர் மது (எ) ஹேமநாத் தலைமையில் நடந்தது. இதில், ஊராட்சி  ஒன்றியக்குழு சேர்மன் லாவண்யா ஹேமநாத் முன்னிலை வகித்தார்.  பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கிழக்கு மாவட்ட செயலாளரும்  முன்னாள் எம்பியுமான அசோக்குமார் மற்றும் முன்னாள் ஆவின் தலைவர் தென்னரசு,  முன்னாள் மாவட்ட செயலாளர் காத்தவராயன் மற்றும் கழக பேச்சாளர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

Tags : AIADMK ,meeting ,Sulagiri ,
× RELATED அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்று...