×

மாவட்ட அளவிலான போட்டியில் பாரத் பள்ளி மாணவர் சாதனை

கிருஷ்ணகிரி, பிப்.28: கிருஷ்ணகிரி அருகே சுபேதார்மேட்டில் இயங்கி வரும் பாரத் இண்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நடந்தது. இதில் மாணவர் விஜயசாசன் 60 கிலோ எடை பிரிவில் குத்துசண்டை போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். சாதனை படைத்த மாணவர் மற்றும் உடற்கல்வியாசிரியர் இன்பேன்ட் ஆகியோரை பாரத் கல்வி குழுமத்தின் நிறுவனர் மணி, தாளாளர் கிருஷ்ணவேணி மணி, கேஎம்எஸ் மருத்துவமனையின் இயக்குனரும், பாரத் அறக்கட்டளையின் செயலாளருமான டாக்டர் சந்தோஷ் மற்றும் முதல்வர் நரேந்திரநாத்ரெட்டி, ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.

Tags :
× RELATED கிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்