×

வத்திராயிருப்பு அருகே பயன்பாடின்றி கிடக்கும் பொது சுகாதார வளாகம்

தண்ணீர் இல்லாததால்  அவலம்
வத்திராயிருப்பு, பிப்.28:  வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டியில் தண்ணீர் இல்லாததால் பொது சுகாதார வளாகம் பயன்பாடு இன்றி கிடக்கிறது. வத்திராயிருப்பு  அருகே உள்ளது தம்பிபட்டி. இங்குள்ள மக்கள் நல்ல தண்ணீருக்காக சிரமப்படுகிறார்கள். எனவே தாமிரபரணி தண்ணீர் தினந்தோறும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கிருஷ்ணாபுரத்தில் இருந்து சுடுகாட்டிற்கு போகக்கூடிய பாதையில் உள்ள பொது கழிவறை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் வசதி இல்லாமல் பயன்பாடின்றி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பெண்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். உடனடியாக தண்ணீர் வசதி ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். மாரியம்மன் கோவில் தெருவில் மக்கள் குளிப்பதற்காக தண்ணீர் தொட்டி கட்ட வேண்டும். கோட்டையூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் தரைமட்ட தொட்டி அமைத்து தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து கரட்டுகாட்டிற்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அந்த சாலையின் நடுவே ஓடை உள்ளது. மழை காலங்களில் ஓடையை கடக்க முடியாமல் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். எனவே அந்த ஓடையில் பாலம் கட்ட வேண்டும் என்று மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.  ஆனால் பாலம் கட்டப்படாமல் சாலையும் போடப்படாமல் உள்ளது. உடனடியாக சாலை போட வேண்டும், பாலமும் கட்டவேண்டும். மாவூத்து பகுதியில் இருந்து வரக்கூடிய மழை நீர் மற்றும் தம்பிபட்டி  பகுதியில் உள்ள கழிவு நீரும் சேர்ந்து தம்பிபட்டி குளத்திற்கு செல்லும். ஆனால் தற்போது அந்த ஓடை புதர் மண்டி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. அந்தப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீடுகளில் வசிப்பவர்களுக்கு இந்த கழிவு நீரால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி வருகின்றன. மக்கள் சுகாதாரமாக வாழ்வதற்கு இந்த ஓடையை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஒன்றிய கவுன்சிலர் சையதுராபியா கூறுகையில், என்னுடைய ஒன்றிய கவுன்சில் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். கழிவுநீர் ஓடையை தூர்வார வேண்டும். மயான பகுதியில் பராமரிப்பு பணிகள் மற்றும் தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும். பெண்களுக்கான கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Tags : complex ,verandah ,
× RELATED புராதன சின்னங்கள் வளாகத்தில் உயரமான கம்பி வேலி அமைக்கும் பணி தீவிரம்