×

சிலைக்கு மரியாதை காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு விஷம் குடித்த கல்லூரி மாணவி சாவு

வாடிப்பட்டி, பிப்.28: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மதுரையை சேர்ந்த காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார். காதலனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மதுரை மதிச்சியம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் நவீன்குமார்(20). கேட்டரிங் படித்துள்ளார். இந்நிலையில் நவீன்குமாரும், பக்கத்து வீட்டை சேர்ந்த வேல்முருகன் மகள் நிவேதா (18) ஆகியோரும் காதலித்ததாக தெரிகிறது. நிவேதா கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர்களது காதல் பெற்றோருக்கு தெரிய வரவே இருவர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த இருவரும் நேற்று வாடிப்பட்டி அருகே மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் கட்டக்குளம் பிரிவு பகுதியில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர். இதனை பார்த்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி கொடுத்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி நிவேதா பரிதாபமாக இறந்தார். நவீன்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : college student ,
× RELATED சென்னை அருகே திருமுல்லைவாயலில் உள்ள...