×

திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் கண்காட்சி

திண்டுக்கல், பிப். 28: திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரி இயந்திரவியல் துறை மற்றும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் இணைந்து தரமான வாழ்க்கைக்கான அணு தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய முனைவர் வெங்கடேசன் மற்றும் ஜலஜா மோகன் குழுவினர், கல்லூரி தலைவர் தனலட்சுமி, செயல்தலைவர் ரகுராம், முதல்வர் வின்சன்ட் ஆண்டனி குமார் ஆகியோர் தலைமை வகித்தனர. இயந்திரவியல் துறை தலைவர் கண்ணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவியருக்கான வினாடி- வினா போட்டி மற்றும் கண்காட்சி, கருத்தரங்கு நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Exhibition ,BSNA College ,Dindigul ,
× RELATED ஜம்மு-காஷ்மீா் துலிப் மலர் கண்காட்சி புகைப்படங்களின் தொகுப்பு..!!