×

திருமணம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கி ஏமாற்றிய எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிஜிபி அலுவலகத்தில் இளம்பெண் புகார்

சென்னை, பிப்.28: மயிலாடுதுறை வில்லியநல்லூரை சேர்ந்த சுப (25) என்பவர், தமிழக டிஜிபி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: வில்லியநல்லூரை சேர்ந்த நான், கடந்த 5 ஆண்டுகளாக சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். கடந்த 2018ம் ஆண்டு மணல்மேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த விவேக் ரவிராஜ் என்பவர், பேஸ்புக் மூலம் எனக்கு அறிமுகமானார். பிறகு இருவரின் நட்பு காதலாக மாறியது. கடந்த 2018ம் ஆண்டு நம்பவர் 11ம் தேதி, என்னை கோயிலில் சந்தித்தார்.  அதன்பிறகு அடிக்கடி போனில் பேசி வந்தோம். ஒருநாள் என்னை தொடர்புகொண்ட விவேக் ரவிராஜ், உடனே பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.  அதன்படி நான் 2018ம் டிசம்பர் 7ம் தேதி சென்னையில் இருந்து பேருந்து மூலம் சென்று வைதீஸ்வரன் கோயில் பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன்.

இரவு 10 மணிக்கு மேல் வந்து என்னை சந்தித்தார். எங்கள் ஊருக்கு 10.30 மணிக்கு மேல் பேருந்து இல்லாதால் என் வீட்டிற்கு பைக்கில் அழைத்து செல்லுங்கள் என்று கூறினேன். அதனால், அவர் பைக்கில் என்னை அழைத்து சென்றார். பாதி வழியில் எனக்கு தெரிந்தவர்கள் இங்கு அதிகமானோர் இருப்பதால் இருவரையும் ஒன்றாக பார்த்தால் தப்பாக நினைப்பார்கள் என்று கூறினார்.  பிறகு மணல்மேடு கல்லூரி பின்புறம் உள்ள அவர் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு, என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்தார். பிறகு என்னை அதிகாலை 4 மணிக்கு வீட்டிற்கு அனுப்பி விட்டார்.  பின்னர் நான் கர்ப்பமானேன். இதுகுறித்து நான் விவேக் ரவிராஜிடம் கூறினேன். அதற்கு அவர் வீட்டில் நமது திருமணம் பற்றி பேசுவதாக கூறினார். பின்னர் வீட்டில் தற்போது பேச முடியவில்லை. 2020ம் ஆண்டு நாம்  திருமணம் செய்து கொள்ளலாம். எனவே, தற்போது கருக்கலைப்பு செய்துவிடு என்றார். நான் மறுத்தேன். பின்னர், என்னை வற்புறுத்தி அவரது நண்பர் அரிகரனுக்கு தெரிந்த மருத்துவரிடம் அழைத்து சென்று கருக்கலைப்பு செய்தனர்.

அதன்பிறகு விவேக் ரவிராஜ் என்னிடம் பேசுவதை தவிர்த்தார். நான், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அவரை சந்திக்க சென்றபோது, உன்னை திருமணம் செய்ய முடியாது என்று கூறி அடித்தார். இதுகுறித்து நான் கோயம்பேட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அவர் நாகை மாவட்டம் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருவதால், நாகை, தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில் சென்று புகார் அளித்தேன். அப்போதும் நடவடிக்கை இல்லை. எனவே என்னை காதலித்து கர்ப்பமாக்கி கருவை கலைத்த உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ேவண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

Tags : office ,DGP ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...