×

தானமாக பெறப்படும் கல்லீரலை நீண்ட நாள் பாதுகாக்கும் கருவி: மியாட் மருத்துவமனையில் அறிமுகம்

சென்னை: தானமாக பெறப்படும் கல்லீரலை நவீன கருவி மூலம் நீண்ட நாள் பாதுகாத்து நோயாளிகளுக்கு  மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொறுத்துவது  குறித்த மருத்துவர்களுக்கான கூட்டம் மணப்பாக்கத்தில் உள்ள மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையில் நடந்தது    மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ் தலைமை வகித்தார்.   யூகே நாட்டின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஆண்ட்ரியா ஸ்லேகல், மியாட் மருத்துவமனை மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் இளங்கோ சேது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த புதிய சிகிச்சை முறை குறித்து  மியாட் மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன் தாஸ், யூகே நாட்டின் கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆண்ட்ரியா ஸ்லேகல் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

கொழுப்பு நிறைந்த கல்லீரலை  தானமாக  பெறும் போது, அதனை நீண்ட நாள் பாதுகாத்து  நோயாளிகளுக்கு பொறுத்துவதில் பல சிக்கல்கள்  ஏற்படுகிறது.  இதனை தவிர்க்க நவீன  தொழில்நுட்ப உதவியுடன் ஹைபோதெர்மிக் ஆக்சிஜெனட்டட் பெர்ப்யூசன்  என்ற கருவி  மூலம், கொழுப்பு  கல்லீரலை நீண்ட நாள் பாதுகாத்து அதனை தூய்மைப்படுத்தி நோயாளிகளுக்கு  வழங்கும் சிகிச்சை முறை இந்தியாவிலேயே முதல்முறையாக மியாட் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நிறைய உயிர்கள் காப்பாற்றப்படும். இவ்வாறு கூறினர்.

Tags : Miad Hospital ,Introduction ,
× RELATED பெண்களின் உடல்நலத்திற்காக...