×

மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட்டை கண்டித்து குறைதீர் கூட்டத்தில் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், பிப்.28: விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய மாநில அரசு பட்ஜெட் டுகளை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் எழுந்துநின்று திடீர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
பெரம்பலூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி முகமது அஸ்லாம், பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டஇயக்குநர் தெய்வநாயகி,கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பூவலிங்கம், பெரம்பலூர் மாவட்ட வே ளாண்மை துறை இணை இயக்குனர் கணேசன், கூட்டுறவு சங்கங்களின் மண் டல இணைப்பதிவாளர் செல்வகுமார், தமிழ்நாடு மின்சார வாரிய பெரம்பலூர் (வடக்கு) மேற்பார்வை பொறியாளர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியவுடன் விவசாயிகள் சங்க பிரதி நிதிகளான, தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜாசிதம்பரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் செல்லதுரை, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவ சாயிகள் சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன், தமிழ்நாடு கரும்பு உற்பத் தியாளர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் ராஜேந்திரன், அகில இந் திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச்செயலாளர் ரமேஷ், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஜெயராமன், தமிழ்நாடு பாமாயில் சாகுபடியாளர் கள் சங்க மாநிலத் தலைவர் துங்கபுரம்முருகேசன், பூலாம்பாடி திருவள்ளுவர் உழவர் மன்றத் தலைவர் வரதராஜன் உள்ளிட்டோர் எழுந்துநின்று, விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசின் பட்ஜெட் மற்றும் மாநில அரசின் பட்ஜெட் ஆகியவற்றை கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம், ஏ மாற்றாதே ஏமாற்றாதே, வி வசாயிகளை ஏமாற்றாதே, கிடைக்கவில்லை, கிடை க்கவில்லை, வரிச்சலுகை கிடைக்கவில்லை என கோ ஷமிட்டவாறு திடீர்ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் விவசாயிகள் குறை தீர்க்கும்நாள் கூட்ட அரங்கத்தில் 10 நிமிடம் பரபரப்பாக காணப்பட்டது. பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக ஏரிமற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரனிடம் மனு ஒன்றைக் கொடுத்தார். பின்னர் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

Tags : Demonstration ,meeting ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்