×

வேளாண் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

பெரம்பலூர், பிப். 28: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப் பதாவது :
பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கரு விகள் வாடகைக்கு வழங்கும் 4 மையங்கள் அமைக்க அரசு நிதிஒதுக்கீடு செய்து ள்ளது. ரூ.25 லட்சம் மதிப்பீ ட்டில் ஒரு வாடகை மையம் அமைக்க, 40 சதவீத மானி யம் எனும் அடிப்படையில், அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்ப டும்.  முன்னோடி விவசாயிகள், விவசாய சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர் வாடகை மையம் அமைக்க முன்வரலாம். இதற்கான விண்ணப்பத் தை பெரம்பலூர் மாவட்ட வருவாய் கோட்டத்தில் உள்ள உதவி செயற் பொறியா ளர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். மொத்த மானிய தொகையில் பொதுப் பிரிவினருக்கு ரூ.5 லட்சமும், ஆதிதிராவி டர் பிரிவினருக்கு ரூ.3 லட்சமும், பயனாளியின் பெயரில் வைப்புத் தொகையாக 2 ஆண்டுகளுக்கு இருப்பு வைக்கப்படும். மீதித் தொகை பயனாளியின் சேமிப்பு வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். 2 ஆண்டுகளுக்குப்பின் மானியத்தி ல் வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட செ யற்பொறியாளர் சரிபார்த்த பிறகு, மானிய வைப்புத் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.இவ்வாறுகலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.Tags : Agricultural Equipment Rental Centers ,
× RELATED புதிய தொழில் முனைவோர் நீட்ஸ்...