×

கிராமப்புற பகுதிகளில் சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டிகளை புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை

ஜெயங்கொண்டம், பிப். 28: ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு கூட்டத்தில் காற்று வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுப்பது உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் லதா கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்ட மன்றத்தில் உதவியாளர் பழனிசாமி தீர்மானங்களை வாசித்தார்.ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், சம்பத்குமார், ராஜசேகரன், ஜெயந்தி, ரேவதி சத்யா, செந்தமிழ்ச்செல்வி, சுமதி, ராஜேஸ்வரி, அருள்தாஸ், சிவகுமார், நடராஜன், பிரிதிவிராஜன், சுமதி, நாகலட்சுமி, சுப்பிரமணியன், சீதை ஆகிய அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திமுக உறுப்பினர் சிவகுமார் பேசுகையில், தேவா மங்கலம் கிராமத்தில் நூலகம் திறப்பதில்லை. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் தேவை. விளையாட்டு திடலுக்கு உபகரணங்கள் தேவை என்றார்.உறுப்பினர் இறவாங்குடி ராஜசேகரன் பேசும்போது கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் இறவாங்குடி மற்றும் கிராம பகுதிகளுக்கு குடிநீர் ஏற்ற வேண்டும். சின்டெக்ஸ் தொட்டி அமைக்காமல் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட அனைத்து ஆய்வுறை கிணற்றுக்குள் சின்டெக்ஸ் தொட்டி அல்லது சிமென்ட் தொட்டி அமைத்து குடிநீர் ஏற்றவேண்டும் கிராமப்புற துப்புரவு பணியாளர்களுக்கு சுகாதாரம் மற்றும் தூய்மையை பராமரிக்க வேண்டி கை உறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்றார்.

திமுக உறுப்பினர் அருள்தாஸ் பொது நிதியில் ஏரி குளங்களை வெட்டி ஆழப் படுத்த வேண்டும். கிராமப்புறத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அதனை புதுப்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். உறுப்பினர்களின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட ஒன்றியக்குழு தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். ஒன்றியக்குழு தலைவருக்கு அரசு சார்பில் அறை ஒதுக்கியது போல துணைத் தலைவருக்கும் தனி அறை ஒதுக்க வேண்டும் என உறுப்பினர்கள் சார்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் உங்களது கோரிக்கையை எடுத்துரையுங்கள் என கூறினார்.மேலும் காவிரி டெல்டா பாசன வேளாண்மை பாதுகாப்பு மண்டலத்தில் அரியலூர் மாவட்டத்தில் விடுபட்ட காவிரி டெல்டா பாசன பகுதிகளை இணைக்க வேண்டும். கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்த ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பொன்னேரிக்கு கொள்ளிடம் ஆற்றிலிருந்து நீர் கொண்டு வரும் காற்று வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Tags : reservoirs ,areas ,
× RELATED கோடையில் குடிநீருக்கு சிக்கல் இல்லை...