×

ஜெயங்கொண்டம் ஒன்றிய குழுவில் தீர்மானம் ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய திமுக தீர்மானம் அரியலூர் அரசு கலை கல்லூரியில் சர்வதேச வல்லுநர்கள் பற்றிய 2 நாள் மாநாடு

அரியலூர், பிப். 28: சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் வெப்பம் குறைப்பு ஆகியவற்றில் உள்ள சர்வதேச வல்லுநர்கள் பற்றிய சர்வதேச மாநாடு அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் வெப்ப தணிப்பு ஆகியவற்றில் உள்ள சர்வதேச வல்லுநர்கள் பற்றிய சர்வதேச மாநாடு இரு தினங்கள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று அரசு கலைக்கல்லூரி விலங்கியல் துறையின் செயலாளர்கள் ரொனால்டு ரோஸ், பழனிச்சாமி, பிரபாகர் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் தடுப்பு சர்வதேச வல்லுனர்களின் மாநாட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் னிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விளக்கேற்றி மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.இதில் சிறப்புரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும், நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளை சுகாதாரமாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். இதில் கலந்து கொண்ட அனைவரும் சாலை விதிகளையும் கடைபிடிக்க வேண்டும். எங்கள் காவல் அலுவலகத்தில் காவல்துறையினர் முற்றிலுமாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து உள்ளனர். கல்லூரி அலுவலர்கள் மாணவ, மாணவிகள் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தினார். மேலும் இம்மாநாடு உலக அளவில் தமிழ்நாட்டில் முதல்முறையாக நடைபெற்றுள்ளது. இதில் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநாதம் அண்ணாமலை பல்கலைக்கழக கடல் அறிவியல் இயக்குநர் மற்றும் முன்னாள் தலைவர் கதிரேசன், நெதர்லாந்து கரிம வேளாண்மை இயக்குனர் கேரிட் இம்பென்ஸ், கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் மற்றும் தலைவர் ஜெயபிரகாஷ் கலந்து கொண்டனர்.


Tags : conference ,Jayankondam Union Committee Jayankondam North Union ,Experts ,Ariyalur Government Arts College ,
× RELATED காஷ்மீர் மற்றும் லடாக்கில் தொகுதி...