×

டெல்லி கலவரத்திற்கு பொறுப்பு அமித்ஷா பதவி விலக வேண்டும் ஆம் ஆத்மி மாநில தலைவர் பேட்டி

பெரம்பலூர், பிப். 28: புதுடெல்லி கலவரத்திற்கு பாஜக கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும். இதற்காக அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று பெரம்பலூரில் ஆம்ஆத்மி கட்சி கட்சி மாநிலத் தலைவர் வசீகரன் கூறினார்.தேசஒற்றுமையைக் காப் போம், மத நல்லிணக்கத் தை வலியுறுத்தி ஆம்ஆத் மி கட்சியின் சார்பாக அத ன் மாநிலத்தலைவர் வசீ கரன் தலைமையில் சென் னையிலிருந்து திருச்சி வரை 400 கிலோமீட்டர் தூர நடை பயணம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நடைபயணக் குழுவி னர் நேற்று பெரம்பலூ ர் நகருக்கு வந்தடைந்தனர். பெரம்பலூர் நகரில் வடக்கு மாதவிசாலையிலுள்ள உழ வர் சந்தையின் முன்பு நடந் த நடை பயண பிரச்சாரத்தி ற்கு கட்சியின் மாநில தலை வர் வசீகரன் தலைமை வகி த்து, நடைபயணத்தின் நோ க்கம் குறித்தும், புது டெல் லியில் ஆம் ஆத்மி கட்சி யின் 10ஆண்டு சாதனை கள் குறித்தும், மனிதநே யம் காப்போம், மத நல்லி ணக்கம் வளர்ப்போம் என் கிற ரீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த தாவது :தேச ஒற்றுமையே, மத நல் லிணக்கமே ஆம்ஆத்மி கட் சியின் குறிக்கோள்.இந் திய அளவில் 15 லட்சம்பேர் மிஸ்டுகால் மூலம் ஆம்ஆ த்மி கட்சியில் சேர்ந்துள் ளனர்.தமிழகத்தில் 50 ஆயிரம் பேர் ஆம்ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளனர்.பாஜக கட்சிக்கு நாங்கள் ஒரு போதும் ஆதரவாக இருந்ததில்லை. டெல்லி கலவரத்திற்கு அமித்ஷா தான் பதில் சொல்ல வேண் டும். போலீசோ, உளவுப் பிரிவோ ஆம்ஆத்மி கட்டுப்பாட்டில் இல்லை. புது டெல் லி கலவரத்திற்கு பாஜக கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும். இதற்காக அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றார்.மாநில மகளிரணி செயலாளர் ஸ்டெல்லா மேரி, தன்னார்வலர்கள் பம்மல் வெங்கட், பல்லாவரம் சையத், வில்லிவாக்கம் அனூப் ஆகியோர் உடனிருந்தனர்.


Tags : Amit Shah ,AAP ,
× RELATED சொல்லிட்டாங்க...