×

எம்பி ஜோதிமணி கேள்வி கரூர் அருகே ஏமூரில் போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவுக்குழு கூட்டம்

கரூர், பிப். 28: கரூர் அருகே உள்ள ஏமூரில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை மேம்படுத்தும் விதமாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. ஊராட்சித்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் கலந்துகொண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வழிமுறைகள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சமூக விரோதிகள், திருடர்களிடம் இருந்து தப்பிக்க தற்காப்பு வழிமுறைகள் குறித்து பேசினார், மேலும் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை எவ்வாறு காவல்துறைக்கு தெரிவிப்பது என பொதுமக்களிடம் கலந்துரையாடினார், டிஎஸ்பி சுகுமார், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Tags : meeting ,Jothimani Question Police-Public Relations Committee ,Karur ,Emur ,
× RELATED கரூர் புதுத்தெரு வழியாக செல்லும் வாகனங்களை முறைப்படுத்த நடவடிக்கை தேவை