×

நகராட்சி, பேரூராட்சிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கருத்து தெரிவிக்க 2ம் தேதி வரை வாய்ப்பு கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை, பிப்.28: திருவண்ணாமலை மாவட்டத்தில், நகராட்சி மற்றும் பேரூராட்சி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பான கருத்து மற்றும் ஆட்சேபனையை வரும் 2ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் நடந்து முடிந்தது. அதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்ெகாண்டுள்ளது.அதைெயாட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் செங்கம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், போளூர், புதுப்பாளையம், களம்பூர், கண்ணமங்கலம், சேத்துப்பட்டு, தேசூர், பெரணமல்லூர் ஆகிய 10 பேரூராட்சிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.மேலும், வரைவு வாக்குச்சாவடி பட்டியலை பொதுமக்கள் பார்வையிட வசதியாக, அனைத்து நகராட்சி அலுவலகங்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. எனவே, வரைவு வாக்குச்சாவடி பட்டியலை பொதுமக்கள், கட்சி பிரதிநிதிகள் பார்வையிட்டு, அது தொடர்பான கருத்துக்கள் அல்லது ஆட்சேபனைகளை வரும் 2ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Municipalities ,Parties ,
× RELATED தூத்துக்குடி நகராட்சி பகுதிகளில் மறு...