×

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் 6ம் தேதி நடக்கிறது

வேலூர், பிப்.28: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 6ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மற்றும் பிற துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள் பெறுவது சம்பந்தமாக விண்ணப்பங்கள் அளிக்கலாம்.

அனைத்து துறைகளின் அலுவலர்களை ஒருங்கிணைத்து மாற்றுத்திறனாளிகளின் குறைகளை போக்கும் விதமாகவும், துறைகளின் திட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன் பெறவும் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் வரும் 6ம் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Velur Collector ,Office Special ,
× RELATED மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...