×

வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிப்பது எப்படி? எம்பி, கலெக்டர், எஸ்பி அதிகாரிகளுடன் ஆலோசனை

வேலூர், பிப்.28: வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிப்பது எப்படி என்பது குறித்து எம்பி, கலெக்டர், எஸ்பி ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.வேலூர் நாடாளுமன்ற தொகுதி குழு சார்பில் நேற்று மாவட்ட அளவிலான சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. எஸ்பி பிரவேஷ்குமார், டிஆர்ஓ பார்த்தீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் எம்பி கதிர்ஆனந்த் கலந்து கொண்டு பேசினார்.இந்த கூட்டத்தில் டிஎஸ்பிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் லாரி பஸ் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் சார்பில் சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. குறிப்பாக மேம்பாலம் அவசியம் ஏற்படும் இடத்தில் உடனடியாக மேம்பாலம் அமைத்து தருவது, சாலை சீரமைப்பது உள்பட பல்வேறு விஷயங்களை பேசினார்கள்.

தொடர்ந்து எம்பி கதிர்ஆனந்த், சத்துவாச்சாரியில் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அங்கு பாதசாரிகளுக்காக சுரங்க நடைபாதை அமைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் என்ன? மற்றும் வேலூர் ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் அதற்கு தீர்வு காண்பது உள்பட பல்வேறு விஷயங்களுக்கு தீர்வு காண என்ன செய்யலாம் என அதிகாரிகளிடம் கேட்டார்.அதற்கு அதிகாரிகள் தரப்பில் பல்வேறு யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்த ஆலோசனையில் வேலூரில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் விளக்கி கூறினார்.

Tags : district ,traffic crisis ,Vellore ,SP ,Collector ,MB ,
× RELATED வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை...