×

இன்று முதல் துவக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நெல் தரிசில் சாகுபடி குறித்து ஆய்வு

நீடாமங்கலம், பிப்.28:நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மாவட்ட மாதாந்திர ஆய்வுக்கூட்டம் வேளாண்மை துணை இயக்குனர் ரவீந்திரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் அனைத்து வட்டாரங்களிலும் மேற்கொள்ளப்பட்ட சம்பா மற்றும் தாளடி அறுவடை மகசூல் குறித்தும், நெல் தரிசில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள பயிர்களின் பரப்பு குறித்தும், அதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்ரமணியன், வேளாண்மை அறிவியல் நிலையத்தின் நடைபெறவிருக்கும் அறிவியல் ஆலோசனை கூட்டம் குறித்தும், அதில் இதர துறை அலுவலர்கள் பங்கு கொண்டு தங்கள் துறை சார்ந்த பணிகளுக்கு வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பங்களிப்பு குறித்தும் பேசினார்.

பூச்சியியல்துறை உதவி பேராசிரியர் ராஜாரமேஷ் பேசுகையில், நெல் தரிசு பயறுவகைப்பயிர்கள் மற்றும் நெல் தரிசு பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை முறைகள் குறித்தும் தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மற்றும் கருத்தலைப்புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பேசினார்.மண்ணியல்துறை உதவி பேராசிரியர் அனுராதா, வேளாண்மை துணை இயக்குனர்கள் உத்திராபதி, கல்யாணசுந்தரம் மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள், வேளாண்மை அலுவலர்கள்,துணை வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு