×

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது சொகுசு பஸ் மோதி 2 பேர் பலி

செய்யூர்: கூவத்தூரில் இருந்து நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் ஒரு ஷேர் ஆட்டோ, 5 பயணிகளை ஏற்றி கொண்டு பவுஞ்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. டிரைவர் செல்வம் (28) ஆட்டோவை ஓட்டினார். ஈசிஆர் சாலை கண்டிகை கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே, ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி, ஷேர் ஆட்டோ மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.இதில், டிரைவர் செல்வம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, துடிதுடித்து இறந்தார். அதில் பயணம் செய்த பள்ளி மாணவி உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.தகவலறிந்து அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு செய்யூர் அருகே ஜல்லிமேடு பகுதியை சோ்ந்த தணிகைவேல் (23) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.பவுஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் குவாரிகளில் இருந்து லோடு ஏற்றி செல்லும் லாரிகள், அதிவேகமாக செல்வதால், இதுபோன்று அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்பு சம்பவங்கள் நடக்கின்றன. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : bus crashes ,Chennai ,highway ,Trichy ,
× RELATED சென்னையில் இருந்து லாரி மூலம் உ.பி....