×

ஜெயங்கொண்டத்தில் நகைக்காக பெண் கொலை குற்றவாளியை விரைந்து கைது செய்த தனிப்படையினருக்கு டிஐஜி பாராட்டு

திருச்சி, பிப். 27: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வேலாயுதம் நகரில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி வீட்டில் தனியாக இருந்த பாரதி (38) என்பவர் கொலை செய்யப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த ஜெயங்கொண்டம் போலீசார் விசாரித்து வந்தனர். தொடர்ந்து 20 மாதங்களுக்கு மேலாக விசாரணை நீடித்தது. இந்நிலையில் வழக்கை துரிதப்படுத்தும் விதமாக டிஐஜி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் விசாரணையை துவக்கினர். விசாரணையில் நகைக்காக பாரதி கொல்லப்பட்டது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ஜெயந்தி மற்றும் சின்னராசு ஆகிய இருவரும் இணைந்து கொலையை செய்து பாரதியிடம் இருந்து 15 பவுன் நகையை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் வழக்கை துரிதமாக விசாரித்து நடவடிக்கை எடுத்த தனிப்படை இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, ஜெகதீசன், எஸ்ஐ ராஜா, ஏட்டு செந்தில்குமார், மணிவண்ணன், மணிமொழி, மணிவாசகன், ராஜேஷ் ஆகியோரை டிஐஜி பாலகிருஷ்ணன் பாராட்டி வாழ்த்து கூறினார்.

Tags : men ,DIG ,jewelery ,murder ,Jayankondam ,
× RELATED ஆவடி அருகே நகைக்கடைக்குள் புகுந்து...