×

ஓடாச்சேரியில் பரபரப்பு ஜாம்புவானோடை கிராமத்தில் பழமையான நீர்த்தேக்க தொட்டியை அகற்றி புதிதாக கட்டி தரப்படும் ஆய்வின்போது திமுக எம்எல்ஏ வாக்குறுதி

முத்துப்பேட்டை, பிப்.27: ஜாம்புவானோடை கிராமத்தில் உள்ள பழமையான நீர்த்தேக்க தொட்டியை அகற்றி விட்டு புதிதாக கட்டித்தரப்படும் என திமுக எம்எல்ஏ ஆடலரசன் ஆய்வின்போது தெரிவித்தார்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை ஊராட்சி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சிகளில் ஒன்றாகும். இங்குள்ள தட்டான்கொல்லை பகுதியில் கிணறு அமைத்து 60ஆண்டு பழமையான குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஒன்று இருந்தது. இதன் மூலம் இப்பகுதிக்கு மட்டுமின்றி சுற்றுபகுதிக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்தநிலையில் தொட்டி பொழிவு இழந்து பழுதடைந்ததால் அதனை உபோயோகம் படுத்தாமல் சுமார் 15ஆண்டுக்கு முன்பு பயன்படுத்தி வருவதை நிறுத்தப்பட்டு தற்பொழுது வரை பயனற்று கிடக்கிறது. இதனால் சுற்றுபகுதியில் புதிய குடிநீர் டேங் அமைக்கப்பட்ட நிலையில் தட்டான்கொல்லை பகுதிக்கு மட்டும் இன்னும் புதிய டேங் அமைக்கப்பட வில்லை. இதனால் இப்பகுதி மக்கள் நெடுந்தூரம் சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த பழமையான குடிநீர் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதியதாக மக்கள் பயன்பாட்டிற்கு கட்டித்தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் அதிகாரிகள் இந்த கோரிக்கையை கண்டுக்கொள்ளவில்லை.

இந்தநிலையில் நேற்று திருத்துறைப்பூண்டி திமுக எம்எல்ஏ ஆடலரசன், ஜாம்புவானோடை கிராமத்திற்கு சென்றவர், தட்டான்கொல்லை பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்பொழுது அப்பகுதி மக்கள் இந்த பழைமைய குடிநீர் தேக்க தொட்டிக்கு பதில் புதிய தொட்டி அமைத்து தரவேண்டும் என கோரி்க்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து இந்த பழமையான குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியையும், அதன் ஊற்று கிணறையும் பார்வையிட்டவர். விரைவில் தொகுதி மேன்பாடு நிதியில் நிதி ஒதுக்கீடு செய்து கட்டிதரப்படும் என்று கூறினார். இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவருக்கு நன்றியை தெரிவித்தனர்.அய்வின்போது முன்னாள் பேரூராட்சி தலைவர் கார்த்திக், ஜாம்புவானோடை ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன், துணைத் தலைவர் ராமஜெயம் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags : MLA ,DMK ,village ,
× RELATED பல்லடம் வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ தர்ணா