×

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முத்துப்பேட்டையில் 12வது நாளாக போராட்டம் நீடிப்பு

முத்துப்பேட்டை, பிப்.27:முத்துப்பேட்டையில் அனைத்து ஜமாஅத் மற்றும் அணைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைந்து இருக்கும் குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் புதுத்தெரு திடலில் தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரியும், தமிழகத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்றும் வலியுறுத்தி கடந்த 15ம்தேதி மாலை முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர். இந்நிலையில் நேற்று 12வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் ஜெர்மன்அலி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் கருத்தப்பா சித்திக், அன்சாரி, வக்கீல் தீன்முகமது, அபுபக்கர் சித்திக், சம்சுதீன் மற்றும் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இளைஞர்கள் சிறுவர்கள் பங்கேற்ற எதிர்ப்பு கோசங்கள், பெண்கள் பங்கேற்ற சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்றிரவு போராட்டத்தில் கலந்துக்கொண்ட சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் குழந்தைகள் அனைவரும் ஒரே நேரத்தில் கண்ணில் கருப்புதுணி கட்டி நூதனப்போராட்டத்தில் ஈடுபட்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர். போராட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க முத்துப்பேட்டை டிஎஸ்பி இனிகோதிவ்யன், முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்.இன்ஸ்பெக்டர் உஷாதேவி ஆகியோர் உள்ளிட்ட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
× RELATED அரசின் ஜீவன் ரக்க்ஷா விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு