×

சலங்கை ஓசையால் பொதுமக்கள் அச்சம் கோயில் உண்டியலை திருடிய 4 பேர் மீது வழக்கு

மன்னார்குடி, பிப்.27: மன்னார்குடி அருகே கோயில் உண்டியலை திருடி சென்றதாக வந்த புகாரின் பேரில் 4 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வரு கின்றனர்.மன்னார்குடியை அடுத்த நெடுவாக்கோட்டை தெற்கு தெருவில் மாயக்காத்தான் கோயில் உள்ளது. இக்கோயில் அதே ஊரை சேர்ந்த ஏராளமான குடும்பங்களுக்கு குலதெய்வ கோவிலாகும். இக்கோயிலில் கருணாகரன் என்பவர் பூசாரியாக வேலை வார்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கருணாகரன் கோயிலுக்கு பூஜை செய்ய சென்றபோது கோயில் வாசலில் இருந்த உண்டியல் மற்றும் உண்டியலை சேர்த்து கட்டப்பட்டிருந்த சிறிய மண்டபம் ஆகியவை இடிக்கப்பட்டு கிடந்தது.

மேலும் உண்டியலையும் காணவில்லை. இதுகுறித்து கிராம மக்களிடம் தகவல் தெரிவித்த பூசாரி கருணாகரன், சம்பவம் குறித்து மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கோயில் உண்டியலை உடைத்து திருடி சென்றதாக அதே கிராமத்தை சேர்ந்த பார்த்தீபன், அறிவழகன், வீரமணி, பிரபு ஆகிய நன்கு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.இன்றைய காலகட்டத்தில் விஷம் போல் ஏறி வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஆட்டோ ரிக்ஷாக்கள் கடுமையான அளவிற்கு கட்டணங்களை உயர்த்தி வருகிறது. இதனால் ஆட்டோ பயணம் என்றாலோ பொது மக்களுக்கு பயம் கொள்ளச் செய்கிறது.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு