×

தென்னையில் இருந்து தயாரிக்கப்படும் நீராபானம் விற்பனை மையம் துவக்கம்

பேராவூரணி, பிப். 27: பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலத்தில் தென்னையில் இருந்து தயாரிக்கப்படும் நீராபானம் விற்பனை மையம் துவங்கப்பட்டது. தென்னை விவசாயிகளின் நலன்கருதி நீராபானம் உற்பத்தி செய்து அதை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதைதொடர்ந்து பேராவூரணி தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் திருச்சிற்றம்பலத்தில் நீராபானம் விற்பனை மையம் திறக்கப்பட்டது.  நிறுவன தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மேலாண்மை இயக்குனர் துரைசெல்வம் முன்னிலை வகித்தார். பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் மைதிலி, நீராபானம் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி, வேளாண் விற்பனை வணிக அலுவலர் தாரா மற்றும் நிறுவன இயக்குனர்கள், தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர். நிறுவன முதன்மை செயல் அலுவலர் பிருதிவீராஜ் நன்றி கூறினார்.

Tags : hip-hop sales center ,South ,
× RELATED ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வேலூர்...