×

விராலிமலை அரசு பள்ளியில்மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

விராலிமலை, பிப்.27: விராலிமலை ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.விராலிமமலை ஊராட்சி மன்ற தலைவர் ரவி இந்த பேரணியை துவக்கி வைத்தார். பேரணியானது விராலிமலை முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்தது. மாணவ மாணவிகள் அரசு விலையில்லா கல்வி உபகரணள்கள் வழங்குகிறது. இலவசமாக கல்வி கற்கவும், கனிணி கல்வி கற்கவும் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி வலம் வந்தனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் கோபால், பள்ளி ஆசிரிய, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : Mannar Admission Awareness Rally ,Viralimalai Government School ,
× RELATED விராலிமலை அரசு பள்ளியில் சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு ஒத்திகை