×

40 நாள் தவக்கால நோன்பு துவக்கம் கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி

பெரம்பலூர், பிப். 27: கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று(26ம் தேதி) தொடங்கியது. சாம்பல் புதன் கிழமையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.உலகெங்கும் வாழும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடுவதுபோல், இயேசு கிறி ஸ்துவின் இறப்பு நாளான பெரிய வெள்ளியை, “குட் பிரைடே” என கடைப்பிடித் தும், இயேசு உயிர்த்து எழுந்ததை ஈஸ்டர் பண்டிகையாகக் கொண்டாடியும் வருகி ன்றனர்.இதனையொட்டி இயேசுகி றிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதன் நினைவாக 40 நாட்கள் விரதமிருந்து தவக்கால மாக அனுசரித்து வருகின்றனர். இந்தத் தவக்காலம் நேற்று (26ம் தேதி) புதன்கிழமை சாம்பல் புதன் என்ற பெய ரில் தொடங்கியது.இதனை த் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாடு நிகழ்ச்சி கள் நடத்தப்படுகிறது.தவக் காலத்தின் நிறைவாக ஏப்ரல் மாதம் 9ம்தேதி பெரிய வியாழனும், 10ம் தேதி புனி த வெள்ளியும் உலகெங்கு ம் அனுசரிக்கப்படுகிறது. 12ம் தேதி இயேசு உயிர்த்த ஈஸ்டர் பண்டிகை கொண் டாடப்படுகிறது.

தவக்காலத்தின் தொடக்க நாளான நேற்று கிறிஸ்தவ தேவாலயங்களில், பங்கு குருக்கள் தலைமையில் நடத்தப்பட்ட சிறப்புத் திருப்பலியில்,பங்குகுரு பொது மக்களுக்கு நெற்றியில் சாம்பலில் சிலுவையிட்டு பிரார்த்தனை நடத்தினார். பெர ம்பலூர் மாவட்டத்தில் பெர ம்பலூர் புனித பனிமய மா தா தேவாலயத்தில் வட்டார முதன்மைகுரு ராஜமாணி க்கம் தலைமையிலும், பா ளையம் புனிதசூசையப்பர் தேவாலயத்தில் பங்கு குரு கென்னடி தலைமையிலும் சாம்பல் புதனையொட்டி சிறப்புத் திருப்பலியும் ஆராதனையும் நடைபெற்றது. இதேபோல் அன்னமங்கலம், தொண்டமாந்துறை, நூத்தப்பூர்,வடக்கலூர், திரு மாந்துறை, திருவாளந்து றை, பெருமத்தூர், பாத்தி மாபுரம், பாடாலூர் ஆகிய ஊர்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று தவக்கால திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடுகள் தொடங்கி நடைபெற்றன.

Tags : Gray Mercury Celebration ,Christian Churches ,
× RELATED தேவாலய பணியாளர் நல வாரிய தலைவராக விஜிலா சத்யானந்த் நியமனம்