×

விவசாயிகள் வேதனை ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து நடைமுறை படுத்தகோரி வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், பிப். 27: ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து நடைமுறைப்படுத்தக்கோரி பெரம்பலூரில் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.வங்கி ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்தை விரைவாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும். வங்கி அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரம் வழங்க வேண்டும். வராக்கடன்களை விரைவாக வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அலுவலகம் முன் நேற்று மாலை வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியா கிளை ஊழியர்கள் சங்க தலைவர் சுஜீத் தலைமை வகித்தார்.

பெரம்பலூர் மாவட்ட வங்கி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளான இந்தியன் பேங்க் சந்திரசேகர், யூனியன் பேங்க் ஆப் இந்தியா மனோகர், சக்திவேல், பெரம்பலூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அம்சபுவனா, முரளிசந்தர், லட்சுமி விலாஷ் வங்கி முத்துவேல், பேங்க் ஆப் பரோடா அருள்ராஜ் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.

Tags : Bank union federation ,
× RELATED விளை பொருட்கள் விலை குறைப்பதை...