×

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து பணி வழங்க வலியுறுத்தல்

நாகை,பிப்.27: தொடர்ந்து பணி வழங்க கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நாகை அருகே நேற்று தொடங்கியது.நாகை அருகே பனங்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சிபிசிஎல்) உள்ளது. இங்கு பணியாற்றி வரும் 94 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்க வலியுறுத்தியும், பணி இழக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உட்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. இது தொடர்பாக நடந்த பலகட்ட பேச்சு வார்த்தை நடந்தது.

இதில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தொடர் பணி வழங்கவும், வேலை இழக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கவும், சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிர்வாகம் முன்வரவில்லை. எனவே ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தொடர் பணி வழங்க வலியுறுத்தியும், வேலை இழக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இது குறித்து தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக வரும் 1 ம் தேதி எங்கள் குடும்பத்தினருடன் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம். எனவே இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நல்ல தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்றார்.

Tags : oil refinery workers ,
× RELATED தொடர்ந்து பணி வழங்க கோரி எண்ணெய்...