×

கருப்பம்பாளையம் காசா காலனியில் பெயர்ப்பலகைகளை வணிகர்கள் தமிழில் தான் எழுத வேண்டும்

கரூர், பிப். 27: தமிழில் பெயர்ப்பலகை எழுத வேண்டும் என தமிழ்வளர்ச்சிததுறை உதவி இயக்குனர் வணிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்வளர்ச்சித்துறை மூலம் தமிழ்ஆட்சிமொழி சட்டவார விழாவின் ஒரு பகுதியாக துறை அலுவலர்கள், வணிக நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், மேலைபழனியப்பன், எழில்வாணன், கடவூர் மணிமாறன், ராதா உள்ளிட்ட தமிழறிஞர்கள், வணிக நிறுவன பிரதிநிதிகள் அருண் கருப்புசாமி, வேலவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்வளர்ச்சி உதவி இயக்குனர் முனைவர் அன்புச்செழியன் பேசுகையில், வணிக நிறுவனங்கள் தாழ்மொழியான தமிழுக்கு முதல்இடம் தர வேண்டும். பெயர்ப் பலகைகளில் தமிழிற்கு ஐந்துபுள்ளி எனில் ஆங்கிலத்திற்கு மூன்று, பிற மொழிகளுக்கு இரண்டு என்கிற வகையில் எழுத்து அமைய வேண்டும். ஓட்டல் உணவகம், பேக்கரி அடுமனை, ஜூவல்லரி நகைக்கடை, மெடிக்கல் மருந்துக்கடை, கேஷ் பணம் செலுத்த, ரெஸ்ட்ரூம் கழிவறை என எழுத வேண்டும்.சட்டத்திற்காகவோ, தண்டனைக்கு பயந்தோ எழுதாமல் உணர்வுடன் எழுத வேண்டும். தற்போது ரூ.50 ஆக இருக்கின்ற அபராதக் கட்டணம் ரூ.500 ஆக உயர இருக்கிறது. எனவே நாம் நம்மொழி நம்நாடு நம் மக்கள் என்ற உணர்வோடு தமிழுக்கு வணிகர்கள் சிறப்பிடம் தர வேண்டும் என்றார்.

Tags : Karupampalayam Gaza Colony ,
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா