×

அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களுடன் செல்லும் டூவீலர்களால் மக்கள் அச்சம்

கரூர், பிப். 27: கரூர் நகராட்சி பகுதிகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களுடன் செல்லும் இரண்டு சக்கர வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகம் முழுதும் அனைத்து வாகனங்களிலும் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பயன்படுத்தப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சில பேருந்துகளிலும், இரண்டு சக்கர வாகனங்களிலும் இதுபோன்ற ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காதை பிளக்கும் சத்தத்துடன் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் அதிக வேகத்துடன் நகராட்சி பகுதி சாலைகளில் செல்வது தினமும் நடைபெறும் நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது. கடந்த ஒரு ஆண்டுகளாக, இதுபோன்ற ஆய்வுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. எனவே அனைத்து தரப்பு மக்கள் நலன் கருதி, ஏர்ஹாரன் பயன்படுத்தும் வாகனங்கள் குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முக்கிய சாலைகளில் அதிக வேகத்துடன் ஏர்ஹாரன் ஒலியுடன் செல்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : wheelers ,
× RELATED பைக் நிறுத்தும் தகராறில் 8 இருசக்கர...