×

வேலூரில் ஏழை, எளிய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் 262 பேருக்கு இலவசமாக பயிற்சி அளிக்க இலக்கு: தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திறப்பு

வேலூர், பிப்.27: வேலூரில் ஏழை, எளிய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று திறந்த வைத்தார்.தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் கடந்த 2016ல் தொடங்கப்பட்டது. நகர்ப்புறங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க இந்த திட்டத்தை அரசு தொடங்கியது. இதன்மூலம் புதிய மகளிர் சுய உதவிக்குழு ஆரம்பித்தல், தனிநபர் கடன் பெற்றுத்தருதல், குழு கடன், வங்கி இணைப்புக்கடன், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர்ப்புற வாழ்வாதார திட்டங்களை செயல்படுத்துதல் போன்ற பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் சிறப்பு அம்சமாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் தனித்திறன்களை பெருக்கிக்கொள்ளும் வகையில் வேலை வாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது.இந்நிலையில் வேலூர் அண்ணா சாலையில் உள்ள மகளிர் திட்ட அலுவலகம் அருகே திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் நேற்று திறக்கப்பட்டது. இதனை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன், உதவி திட்ட அலுவலர்கள் திருமேனி, ஜெயகாந்தன், வெங்கடேசன், சமுதாய அமைப்பாளர் துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் கூறியதாவது: ‘மத்திய அரசின் சார்பில் மகளிர் திட்டம் மூலமாக திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மையத்தில் 18 வயது முதல் 35 வயது வரை ஆண், பெண் இருபாலருக்கும் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஸ்டார் ஓட்டல், ஜவுளிக்கடைகளில் வரவேற்பாளர் பயிற்சி, கணினி பயிற்சி ஆகியவை வழங்கப்பட உள்ளது. இவற்றில் வரவேற்பாளர் பயிற்சி ஒரு மாதமும், கணினி பயிற்சி 3 மாதங்களும் வழங்கப்படும். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு வேலூர் மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இதுதவிர தையல், தோல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி உள்ளிட்டவையும் விரைவில் வழங்கப்படும். இந்த ஆண்டில் மொத்தம் 262 பேருக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக வேலூர் மாவட்ட முகமை மூலம் 60 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதையொட்டி அரசு ₹8.16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் பயிற்சி பெற்ற அனைவருக்கும் தேர்வு நடத்தப்பட்டு, வேலை வாய்ப்பு ெபற்றுததரப்படும். இந்த பயிற்சி பெற்றவர்களில் சுய தொழில் தொடங்க விரும்புவோர் கேட்டுக்கொண்டால், மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி பெற்றுத்தரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Target ,adolescents ,Vellore ,Opening of Career Development Training Center ,
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...