×

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, பிப்.27: கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்பது சங்கங்களை உள்ளடக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் அறை கூவலுக்கிணங்க, 10 லட்சம் வங்கி ஊழியர்கள் நேற்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய தொழிலாளர் நல ஆணையரின் தலையீட்டினை தொடர்ந்து, பேச்சுவார்த்தை வரும் மார்ச் 5ம் தேதி நடைபெறவுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி காந்தி சாலையில் உள்ள யூகோ வங்கி முன்பு, அனைத்து வங்கி ஊழியர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு யூகோ வங்கி அதிகாரி ராமராவ் தலைமை வகித்தார். ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க உதவி பொதுச் செயலாளர் சந்தோஷ், இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்க பொறுப்பாளர் ஜெகதீஷ்குமார், இந்திய வங்கி ஊழியர் சங்க நிர்வாகி பாலமுருகன், இந்தியன் வங்கி கிளை செயலாளர் ராஜசேகர் ஆகியோர் கண்டனவுரையாற்றினர். ஹரிராவ் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். வாரம் 5 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு ஒப்பந்தத்தின் போதும் ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் உயர்த்த வேண்டும். குடும்ப பென்ஷன் உயர்த்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வேலை நேரங்களை முறைப்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும். வங்கிகள் இணைப்பை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags : Bank employees ,
× RELATED 6 மாத கடன் தவணை ஒத்திவைப்பு: மத்திய...