×

மதிகோண்பாளையம் அருகே சனத்குமார் நதியை தூர்வார கோரிக்கை

தர்மபுரி, பிப்.27: மதிகோண்பாளையம் அருகே சனத்குமார் நதியை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி அடுத்த வத்தல்மலை நீர்பிடிப்பு பகுதியில் இருந்து சனத்குமார் நதி உருவாகிறது. வத்தல் மலையில் உருவாகும் மழைநீர் அதியமான்கோட்டை, அன்னசாகரம், மதிகோண்பாளையம் ஏரிக்கு வருகிறது. இந்த ஏரிகள் நிரம்பிய பின்னர், கம்பைநல்லூர் சென்று, அங்கிருந்து தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், சனத்குமார் நதி வறண்டு காணப்படுகிறது. தற்போது இந்த நதியில் தர்மபுரி நகராட்சி பகுதிகளான அன்னசாகரம், அக்ரஹாரம் பகுதிகளின் கழிவுநீர் ஓடுகிறது.

தர்மபுரி, அன்னசாகரம், மதிகோண்பாளையம் பகுதிகளில் சனத்குமார் நதியில் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குறுகிய நிலையில் உள்ளது. இதனால், சாக்கடை கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. ஆக்கிரமிப்பால் கால்வாய் முழுவதும் முட்புதர் மண்டி கிடக்கிறது. ஏற்கனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள், கடந்த 3 ஆண்டுக்கு முன்பு சர்வே செய்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள் கூறுகையில், ‘சனத்குமார் நதியில் ஆக்கிரமிப்பை அகற்றி, வரும் கோடை மழைக்குள் நதியை தூர்வார வேண்டும்,’ என்றனர்.

Tags : Sanatkumar River ,Madhikopalpalayam ,
× RELATED தர்மபுரியில் கிடப்பில் போடப்பட்ட...