எட்டயபுரம் ராஜகணபதி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

எட்டயபுரம், பிப்.27: எட்டயபுரம் பாரதியார் தெருவில் உள்ள ராஜகணபதி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலையில் அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, மகாசங்கல்பம், புன்யாவாசனம், வாஸ்து சாந்தி, கலாகர்ஷனம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை, பூர்ணாகுதி தீபாராதனையுடன் துவங்கியது. அதனைதொடர்ந்து இரவு யந்திர ஸ்தாபனம், மருந்து சாத்துதல் நடந்தது.  

நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை, கும்ப பூஜையை தொடர்ந்து மங்கள இசை முழங்க விமான கும்பாபிஷேகமும், அதனைதொடர்ந்து ராஜகணபதி மகாகும்பாபிஷேகம் நடந்தது. இதில் சிந்தலக்கரை ராமமூர்த்தி சுவாமிகள், கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் உள்பட திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை யொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories:

>