×

சாம்பல் புதனுடன் தவக்காலம் துவங்கியது கோவில்பட்டி, நாசரேத்தில் சிறப்பு பிரார்த்தனை

கோவில்பட்டி, பிப்.27: கோவில்பட்டி தூய வளனார் ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனையுடன் தவக்காலம் தொடங்கியது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு 3வது நாள் உயிர்த்தெழுந்ததை கிறிஸ்தவ மக்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். இந்த பண்டிகைக்கு முன்னோடியாக கிறிஸ்தவ மக்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிக்கின்றனர்.இந்தாண்டிற்கான தவக்காலம் நேற்று துவங்கியது. இதையொட்டி நேற்றைய தினம் சாம்பல் புதன் என்று அழைக்கின்றனர். கடந்த ஆண்டு குருத்தோலை நாளில் வழங்கப்பட்ட குருத்தோலைகள் எரித்து சாம்பலை நெற்றியில் சிலுவை வரைவர். இதையடுத்து தவக்காலம் தொடங்கும்.

இந்நிலையில் கோவில்பட்டி மெயின்ரோட்டில் உள்ள தூய வளனார் ஆலயத்தில் சாம்பல் புதன் தவக்காலம் துவங்கியது. இதையொட்டி நேற்று காலையில் சிறப்பு திருப்பலி, மறையுரை நிகழ்ச்சி நடந்தது. ஆலய பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் அமுதராஜ், அற்புதராஜ் ஆகியோர் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவர்களுக்கு பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ் நெற்றியில் சாம்பல் சிலுவை அடையாளமிட்டு தவக்காலத்தை தொடங்கி வைத்தார். இதில் கிறிஸ்தவ பெருமக்கள் திரளாக பங்கேற்றனர்.    நாசரேத்: நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் தவக்கால தொடக்க ஆராதனை தலைமை குரு எட்வின் ஜெபராஜ் தலைமையில் உதவிகுருமார்கள் இஸ்ரவேல் ஞானராஜ், ரொனால்டு பாஸ்கரன் முன்னிலையில் நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

பிரகாசபுரம் பரிசுத்த பரலோக மாதாஆலயத்தில் தவக்கால தொடக்க ஆராதனை பங்குதந்தை அந்தோணி இருதயதோமாஸ் தலைமையில் நடந்தது. பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் சேகரகுரு ஜெபவீரன் தலைமையில் சபை ஊழியர் கோயில்ராஜ் முன்னிலையில் தவக்காலஆராதனை நடந்தது.
மூக்குப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் சேகரகுரு ஜெரேமியா தலைமையிலும், பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் சேகரகுரு ஆல்வின்ரஞ்சித் குமார் தலைமையிலும், பாட்டக்கரை தூய இம்மானுவேல் ஆலயத்தில் சேகரகுரு செல்வசிங் தலைமையிலும், கடையனோடை சிஎஸ்ஐ ஆலயத்தில் சேகரகுரு ஆல்பர்ட் தலைமையிலும் மணிநகர், வகுத்தான்குப்பம், வாழையடி, அகப்பைகுளம், குளத்துகுடியிருப்பு, ஒய்யான்குடி, கச்சனாவிளை, நாலுமாவடி, தங்கையாபுரம், திருவள்ளுவர் காலனி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் தவக்கால தொடக்க சிறப்புஆராதனை நடந்தது.

Tags : Kovilpatti ,Nazareth ,
× RELATED கோவில்பட்டியில் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வருபவருக்கு வலை