சென்னை, பிப். 27: விருதுநகரில் தொடங்க உள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கோரிக்கை வைத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் விருதுநகரிலும் புதிய மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கான முடிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் வருகிற மார்ச் 1ம் தேதி தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டும் விழாவும் நடைபெறவுள்ளது. சிறப்பான முறையில் விழா நடைபெறவும், விரைவாக கட்டிட பணிகள் முடிந்து கல்லூரி தொடங்கிடவும் விருதுநகர் மாவட்ட மாணவர்களின் கனவுகள் விரைவில் நனவாகவும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.