×

சதுரகிரி வரும் பக்தர்களின் இறப்பை தடுக்க தாணிப்பாறை முதல் கோயில் வரை மருத்துவக்குழு இருக்க வலியுறுத்தல்

வத்திராயிருப்பு, பிப். 27: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்பாதையில் செல்லும்போது மாரடைப்பால் உயிரிழப்பதை தடுக்க தாணிப்பாறை முதல் இடைப்பட்ட இடங்கள் மற்றும் கோயில் பகுதி ஆகிய இடங்களில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் அனைத்து நாட்களிலும் மருத்துவ குழுவினர் இருக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வத்திராயிருப்பு அருகே சதுரகிாி சுந்தரமகாலிங்கம் கோயில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. ஆடி அமாவாசைக்கு தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தாிசனம் செய்து செல்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக வௌிநாட்டு பக்தர்களும் வந்துசெல்கின்றனர். அமாவாசை, பவுர்ணமி ஆசியவற்றிக்கு தலா மூன்று நாட்களும், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என பக்தர்கள் சுவாமி தாிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இடைப்பட்ட விடுமுறை நாட்களில் பக்தர்களை அனுமதிப்பதில்லை.

கடந்த ஆடி அமாவாசையின் போது மலைக்கு சாமி தாிசனத்திற்கு சென்ற பக்தர்கள் ஐந்து போ் மாரடைப்பால் மரணமடைந்தனர். இதனையடுத்து தொடர்ந்து அமாவாசை, பவுர்ணமி ஆகிய விசேஷ நாட்களுக்கு வரும் பக்தர்களில் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்து வருகிறார்கள். கடந்த மாசி அமாவாசையின்போது ஒரு பக்தர் மாரடைப்பால் மரணமடைந்தார். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் வெயிலையும் ெபாருட்படுத்தாமல் பக்தர்கள் சென்று வருகின்றனர். இடைப்பட்ட இடங்களில் பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கு எந்தவிதமான நிழற்குடையும் இல்லை. மேலும் தாணிப்பாறை அடிவாரம், இடைப்பட்ட இடங்கள் மற்றும் கோயில் பகுதியிலும் பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க எந்தவித மருத்துவ வசதியும் இல்லாத நிலை உள்ளது.

எனவே தாணிப்பாறை அடிவாரம் மற்றும் இடைப்பட்ட இடங்களில் போதிய மருத்துவக்குழு இருக்க வேண்டும். மூச்சுத்திணறல் போன்றவை ஏற்ப்பட்டால் அதற்கு உடனடி முதலுதவி சிகிச்ைசயளிக்க மருத்துவக்குழு இருந்தால் உடல்நலக்குறைவு ஏற்படும் பக்தர்கள் காப்பாற்ற முடியும். தற்போது ஆடி அமாவாசை திருவிழாவிற்கு மட்டும் மருத்துவ குழுவினர் இருந்து வருகின்றனர். மேலும் இடைப்பட்ட விசேஷ நாட்களுக்கு மருத்துவக்குழுக்கள் இருப்பதோடு, தாணிப்பாறை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்தி மாரடைப்பு உள்ளிட்ட நோய்களுக்கு ஏற்ற சிகிச்சை அளிப்பதற்கு தேவையான உபகரணங்கள் அடங்கிய அதற்கான மருத்துவக்குழுவினர் இருந்தால் பக்கதர்கள் மாரடைப்பால் உயிழப்பதை தடுக்க முடியும். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : devotees ,Thaniparai Temple ,Medical Committee ,death ,
× RELATED சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்