×

வருசநாடு அருகே மலைகிராமத்தில் பூட்டியே கிடக்கும் அங்கன்வாடி கட்டிடம்

வருசநாடு பிப்.27: வருசநாடு அருகே மலைகிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு திறப்புவிழா காணாமல் உள்ளது.வருசநாடு அருகே புதுக்கோட்டை மலை கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் 2009-2010ம் ஆண்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 2.55 லட்சம். ஆனால் இதுவரையும் திறப்புவிழா காணாமல் அங்கன்வாடி கட்டிடம் பூட்டியே இருப்பதின் மர்மம் என்ன என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். இந்த கட்டிடத்தில் பயில்கின்ற அங்கன்வாடி குழந்தைகள் எங்கே உள்ளார்கள்? எதற்காக இந்த கட்டிடம் கட்டப்பட்டது எனவும் பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. எனவே அங்கன்வாடியை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து கிராமத்தை சேர்ந்த ரமேஷ் கூறுகையில், கடமலை மயிலை ஒன்றியத்தில் இதுபோன்ற அரசு கட்டிடங்கள் பல இடங்களில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காணாமல் உள்ளது. இதனால் அரசாங்க பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஏற்கனவே பணியாற்றிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கு தான். எனவே தேனி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : building ,hill village ,Varusanad ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...