×

போடியில் பட்டுப்புழு தீவனம் வளர்க்கும் பணி தீவிரம்

போடி, பிப்.27: போடி பகுதியில் பட்டுப்புழுவின் தீவனத்திற்கு பயன்படும் செடிகளை விவசாயிகள் அதிகளவில் வளர்த்து வருகின்றனர்.போடி பகுதியில் நிலத்தடி நீர் பாசனத்தில் தொடர் விவசாயம் செய்து வருகின்றனர். பட்டுப்புழு தீவனத்திற்காக பட்டுப்புழு செடி வளர்ப்பதற்கான ஆர்வம் விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது. சுந்தரராஜபுரம், அம்மாபட்டி, மேல சொக்கநாதபுரம், கீழ சொக்கநாதபுரம் போன்ற கிராமங்களில் நூற் றுக்கணக்கான ஏக்கரில் மற்ற விவசாய பயிர்களில் ஊடுபயிராகவும் மற்றும் தனிப்பயிராகவும் பட்டுப்புழுவிற்கு உணவளிக்கும் பட்டுப்புழு செடி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக நிலங்களைப் பண்படுத்தி ஆழ்குழாய் பாசனத்தில் விதைகள் பாவி களைகள் பறித்து பட்டுப்புழு பயிரை ஆறு மாதம் வரையில் வளர்த்து ஏக்கருக்கு 70 ஆயிரம் வரையில் செலவு செய்கின்றனர். அறுவடை நேரத்தில் இந்தச் செடி இலைகளைப் பறித்து பட்டுப்புழு வளர்க்கும் பகுதிக்கு கொண்டு சென்று அவைகளுக்கு உணவாக தொடர்ந்து வழங்கப்படுகிறது. இந்த இலை தீவனத்தால் பட்டுப்புழு தடைபடாமல் வேகமாக வளர்ந்து பட்டுப்புழு நூல் எடுப்பதற்கு பயன்படுகிறது. இவைகளை விவசாயிகள் கொள்முதல் செய்து பட்டு சேலை, பட்டு ஜரிகை தயாரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் போடி பகுதியில் அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் பட்டுப் புழு செடிகள் வளர்ப்பதற்கு ஆர்வம் காட்டியுள்ளனர்.

Tags : Bodi ,
× RELATED கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து துவக்கம்