×

செயற்குழு கூட்டம்

காரைக்குடி, பிப். 27: காரைக்குடியில் கலைவாணி பள்ளியில் மாவட்ட சதுரங்க கழகத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் டாக்டர் பிரகாஷ் வரவேற்றார். மாவட்ட தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். துணைத்தலைவர் முத்துக்குமார், கண்ணன், எட்வின், சற்குணநாதன், சார்லஸ், ஜான்கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் கண்ணன் தீர்மானங்களை வாசித்தார். சதுரங்க விளையாட்டில் தேசிய அளவில், மாநில அளவில்சாதனை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கூடுதல் செயலாளர் முனைவர் பிரகாஷ்மாணிமாறன் நன்றி கூறினார்.

Tags : Executive Committee Meeting ,
× RELATED 21 நாள் முடக்கத்தை திட்டமிடாமல்...