×

வருவாய்த்துறை சர்வர் பழுது பரமக்குடி விவசாயிகள் பாதிப்பு

பரமக்குடி, பிப். 27: பரமக்குடி பகுதியில் இ-சேவை மையங்களில், வருவாய்த்துறை சர்வர் இணைப்பு கிடைக்காததால், பட்டா நகல் பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் தாலுகாதோறும் மற்றும் 100க்கும் மேற்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்களில், இ-சேவை மையங்கள் இயங்குகின்றன. இங்கு, ஜாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட வருவாய் சான்றுகள் ஆன்லைன் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் செயல்பட்டுவரும் இ-சேவை மையம் மற்றும் தனியார் பொது சேவை மையங்களில், வருவாய்த்துறை சர்வர் கிடைக்காததால், பட்டா நகல் பெற முடியாமல், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இது குறித்து, விவசாயி ராமசுப்பிரமணியன் கூறியதாவது: விவசாய கடன் அட்டை பெற, பட்டா நகல் அவசியம் என, வேளாண்துறை தெரிவித்துள்ளது. அதற்காக, கூட்டுறவு வங்கி இ-சேவை மையத்திற்கு, நேற்று சென்றபோது, அங்கு, சர்வர் கிடைக்கவில்லை. பரமக்குடி  பகுதிகளில் இயங்கும் இ-சேவை மையங்களிலும், நேற்று மாலை வரை சர்வர் கிடைக்கவில்லை. ஒரு நாள் முழுவதும் அலைந்து திரிந்ததுதான் மிச்சம். அரசு, விரைவான சர்வர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்’ என்றார்.கேபிள் டிவி’ தாசில்தார் அலுவலக ஊழியர்கள் கூறுகையில், ‘காலையில் சர்வர் மெதுவாக இயங்கியது. பின், உடனடியாக சரிசெய்யப்பட்டு விட்டது’ என்றனர்.

Tags : Paramakudi Farmers ,
× RELATED பராமரிப்பு இல்லாமல் கடற்கரையோரம்...