×

கமுதி அருகே மாசிக்களரியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்

கமுதி, பிப். 27: கமுதி அருகே மாசிக் களரி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.கமுதி அருகே முஷ்டகுறிச்சி கிராமத்தில் 17வது மாசிக் களரி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. 3 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 30 மாட்டு வண்டிகள் ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்டன.

முஷ்ட குறிச்சி கிராமத்தில் இருந்து கமுதி சாலைநோக்கி 12 கி.மீ. தொலைவிற்கும், 10 கி.மீ. தொலைவிற்கும் பந்தயம் நடைபெற்றது.முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாட்டுவண்டியின் பந்தய வீரர்களுக்கு ரொக்கப் பரிசு, அண்டா, குத்துவிளக்கு என பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags : Masikalari ,Kamuthi ,
× RELATED முத்தையாபுரத்தில் பேருந்து கண்டக்டரை தாக்கிய இருவர் கைது