×

வறட்சிக்கால கால்நடை பராமரிப்பு பயிற்சி முகாம்

திருப்பூர், பிப். 27:   திருப்பூர் மாவட்டம் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வறட்சிக்கால கால்நடை பராமரிப்பு மற்றும் மேலாண்மை குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் மார்ச் 3ம் தேதி நடக்கிறது. இது குறித்து திருப்பூர் மாவட்டம் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தலைவர் டாக்டர் மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் வறட்சிக்கால கால்நடை பராமரிப்பு மற்றும் மேலாண்மை குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் மார்ச் 3ம் தேதி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் மைய்யத்தின் கூட்ட அரங்கில் நடக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் ஹைட்ரோபோனிக்ஸ் (நீர்மத்தாவர வளர்ப்பு), அசோலா வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு மற்றும் 10 சென்ட் நிலத்தில் தீவனப்பயிர் வளர்த்தல் குறித்து விரிவான பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.

 இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்பவர்களுக்கு மதிய உணவு, காலை, மாலை சிற்றுண்டி, குறிப்பு புத்தகம் மற்றும் எழுதுகோல் இலவசமாக வழங்கப்படும். இந்த பயிற்சி முகாமில் 40பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 28ம் தேதிக்குள் தங்களுடைய பெயர்களை பதிவு செய்துகொள்ளவும். மேலும் விபரங்களுக்கும், முன்பதிவிற்கு 0421-2248524 என்ற தொலைபேசி எண்ணை தொடர்ப்பு கொள்ளவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Drought Livestock Training Camp ,
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா