×

புதுச்சேரியில் உயர் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்

புதுச்சேரி, பிப். 27:   புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் 19 அதிகாரிகள் வேறு துறைகளுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சிலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  புதுச்சேரி அமலாக்கத்துறை கூடுதல் செயலர் ஜார்ஜ் கே.மாறன் சுற்றுச்சூழல் மற்றும் வீட்டு வசதி துறை கூடுதல் செயலராக மாற்றப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை இயக்குநர் முகம்மது மன்சூர் துறைமுகத்துறை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயல்திட்ட அதிகாரி காந்திராஜன் காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரி இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு காரைக்கால் பஜன்கோ கல்லூரி சிறப்பு அலுவலராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. மின்சக்தி, துறைமுகத்துறை சார்பு செயலர் பணியாளர் நலத்துறை சார்பு செயலராக மாற்றப்பட்டுள்ளார். வீட்டு வசதி துறை செயலர் ஜான்சன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயல்திட்ட அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ரகுநாதன் காவல்துறை சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். உழவர்கரை வட்டார வளர்ச்சி அதிகாரி ராகினி கலை பண்பாட்டு துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 காத்திருப்பு பட்டியலில் உள்ள அன்பழகன் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை சிறப்பு அலுவலர் சேகர் நகர மேம்பாட்டு மைய திட்ட அலுவலகராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வில்லியனூர் பிடிஓ செலினாவுக்கு உழவர்கரை பிடிஓவாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உள்துறை சார்பு செயலர் வெர்பினா ஜெயராஜூக்கு பள்ளிக்கல்வி துறை துணை இயக்குநராக பதவி வழங்கப்பட்டுள்ளது. காரைக்கால் துணை கலெக்டர் ஆதர்ஷ்க்கு கோயில்கள் செயல் அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அரியாங்குப்பம் பிடிஓ மலருக்கு மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநர் யஷ்வந்தையா ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி நகராட்சி ஆணையர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் நிதித்துறை சார்பு செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தொழில்துறை துறை இயக்குநர் சிவக்குமார் புதுச்சேரி நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல மேலும் 3 பேர் வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கவர்னர் கிரண்பேடியின் உத்தரவை தலைமை செயலர் அஸ்வனிகுமார் வெளியிட்டுள்ளார்.

Tags : transfer ,Puducherry ,
× RELATED அமலாக்கத்துறை வழக்கில் விடுவிக்க...