×

சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரி 5 பேர் பட்டினி போராட்டம்

பெரம்பூர்: குடியுரிமை  திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய  மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை கண்டித்தும், இவற்றை செயல்படுத்தாமல் இருக்க  தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் 5 பேர் காலவரையற்ற பட்டினி போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.  குடியுரிமை  திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய  மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை கண்டித்தும், இவற்றை செயல்படுத்தாமல் இருக்க  தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் நேற்று காலை  அயனாவரம், கருணாநிதி நகர் 14வது தெருவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி  அலுவலகத்தில் காலவரையற்ற பட்டினி போராட்டம் துவங்கியது. இதில்  எல்டியுசி ஜேம்ஸ், ராமன், கம்யூனிஸ்ட் ஜீவா புகழ்வேந்தன், ஜெயபிரகாஷ்  நாராயணன் மற்றும் ராஜேஷ் ஆகிய 5 பேரும் நேற்று காலை முதல் தொடர் பட்டினி  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி  வருகிறது.

Tags : hunger strikes ,legislature ,
× RELATED டெல்லி சட்டப்பேரவை: பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்