×

பிப். 28ல் துவக்கம் புன்னம் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ பிரிவு தொடங்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

க.பரமத்தி, பிப்.26: புன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதியதாக அரசு சித்தா மருத்துவ பிரிவு தொடங்கி சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். க.பரமத்தி ஒன்றியத்தில் சின்னதாராபுரம், க.பரமத்தி, புன்னம், காசிபாளையம், கார்வழி, விசுவநாதபுரி, தும்பிவாடி ஆகிய 7 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், இவற்றின் கீழ் 22 துணை ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. ஒன்றியத்தில் சின்னதாராபுரம், க.பரமத்தி ஆகிய இரு வெவ்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவ பிரிவு மருத்துவ சேவையாலும் மர்ம காய்ச்சல் போன்ற பீதியால் நிலவேம்பு கசாயம் பெற நோயாளிகள் வருகை அவ்வப்போது அதிகரித்து இதனால் இயற்கை மருத்துவ பிரிவில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், புன்னம் சுற்று பகுதியில் இருந்து பலவித நோய்களுக்கு புன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறோம். புன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆயுர் வேதிக், ஹோமியோ பதி, சித்தா மருத்துவ பிரிவு என எதுவுமே இல்லை. இதனால் அலோபதி மருத்துவத்திலேயே மக்கள் சிகிச்சை பெற வேண்டியதிருக்கிறது. எனவே புன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில எந்த விதமான சிறப்பு சிகிச்சை பிரிவுகளும் இல்லாத நிலையால் அரசு சித்தா மருத்துவ பிரிவு புதியாக தொடங்கிட வேண்டி இது குறித்து பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எவறும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட அதிகாரிகள் இனியாவது அரசு சித்தா மருத்துவ பிரிவு தொடங்கிட நடவடிக்கை எடுத்தால் இப்பகுதி ஏழை எளிய பொதுமக்களுக்கு மினவும் பயனுள்ளதாக இருக்கும் என பொது மக்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Pip ,inauguration ,Siddha Medical Unit ,Punnam Government Hospital ,
× RELATED வலங்கைமானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு துவக்க விழா